பாரிஜாதம் அழுது கொண்டிருந்தாள்.வேலைக்காரி மரகதம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதும் நான் இளமையில் செய்த பாவங்களால் தான்
இப்போது இப்படி கஷ்டப் படுகிறேன் என்றாள்.அப்படி என்ன செய்தீர்கள் என்று கேட்டாள் மரகதம். இந்துவான நீங்கள் கிறிஸ்தவராகிய லாரன்ஸ் சாரைக் காதல் திருமணம் செய்தது பெரிய பாவம் ஒன்றுமில்லை என்றும் கூறினாள். அதற்கு பாரிஜாதம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அது தெரிந்தும் நான் திருமணம் செய்து கொண்டேன்.அது மட்டுமல்லால் அவர்களை பார்க்க போகக் கூடாது தடை போட்டு விட்டேன்.அவர் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செலவிற்குப் பணம் கொடுத்தே தீருவேன் எனப் பிடிவாதமாக தன் நண்பர் மூலமாக தான் இறக்கும் வரை கொடுத்துக் கொண்டேதான் இருந்தார். அந்த நேரத்தில் அவர் மகனும் வேலைக்குப் போய் விட்டான்.எனவே என்னிடம் பணம் கேட்டு வரவில்லை.திருமணம் ஆகும்போது நான் தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில்தான் வேலை பார்த்தேன்.ஏதோ நல்ல வேளையாக அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தது.இன்று ஓய்வுஊதியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.நான் செய்த பாவத்தால் தான் இன்று இப்படி பார்க்க ஆளில்லாமல் நடமாட முடியாமல் கிடக்கிறேன் என்று அழுது தவித்தார். மரகதம், டீச்சர் நீங்கள் அந்தப் பையனை வரச் சொல்லிப் பேசுங்களேன் என்றாள்.அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது.எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றும் தெரியாது.அவரது மனைவி மறைந்து விட்ட தகவல் மட்டும் எனக்குத் தெரியும்.நான் முன்னரே சந்தித்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.நான் பெரிய தவறு செய்து விட்டேன்.இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அவஸ்தைப்படப் போகிறேனோ என்றாள் பாரிஜாதம்.வினையை விதைத்தவன் வினையை அறுத்துத் தானே ஆகவேண்டும்.