. விமானம் சென்னையைக் கடந்து வங்கக் கடலில் பறக்க ஆரம்பித்தது.இருக்கையின் எதிராக சிறிய மானிட்டர் இருந்தது.அதில் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பற்றி கூறப்பட்டன.பணிப்பெண் ஒரு சூடான டவலைத் தந்தாள்.ஆவி பறந்தது . இட்லியாக இருந்தால் வாயில் போடலாம்.இதை என்ன
செய்வது எனத் தெரியவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவர்கள் போலவே உள்ளங்கைகளையும், முகத்தையும்
துடைத்துக் கொண்டோம்.
மானிட்டரில் படம் பார்க்க இயக்கும்
முறை தெரியவில்லை.நள்ளிரவு 12 மணி. தூங்கலாம் என நினைத்த போது அறுசுவை மணம் நாசியைத்
துளைத்தது.எங்களுக்கு தக்காளி சாதம், தயிர்சாதம், பாயாசம், உருளைக் கிழங்குக் கூட்டு,பீன்ஸ் பொரியல், காராமணி சுண்டல், காஃபி வழங்கப் பட்டது.இத்தனையும்
சாப்பிட்டால் சர்க்கரை அளவு எகிறி
விடும் என மனம் எச்சரிக்கை மணி
அடித்தது.எனவேஅனைத்திலும் பாதி மட்டுமே சாப்பிட்டேன். உண்ட மயக்கத்தில் உறக்கம் வந்தது.ஒரு மணி நேரத்தில் விழிப்பு வந்து விட்டது.
கடலில் ஆங்காங்கே சிறுசிறு தீவுகள் இருந்தன.அதில் ஒளி விளக்குகள் புள்ளிகள் போல காட்சி அளித்தது.சற்று நேரத்தில் நகரும் ஒளிப்புள்ளிகள் தோன்றின.அவை கப்பல்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.சிங்கப்பூரின் அருகில் வந்து விட்டோம் என அறிவிப்பு வந்தது.சீட் பெல்ட் போட்டு உள்ளார்களா என்பதை பணியாளர்கள் உறுதி செய்து கொண்டனர்.சாய்ந்த நிலைகளில் இருந்த இருக்கைகளை நிமிர்த்தி வைத்தனர்.என் மடியில் வைத்து இருந்த கைப் பையை வாங்கி முன்
இருக்கையின் கீழே வைத்தார் ஒரு பணியாளர்.விமானம் தரையில் இறங்கத் தொடங்கியது. இந்திய நேரம் 3.25a.m . சிங்கப்பூர் நேரம் 5.55 a.m.வெளியே காலநிலை 21 டிகிரி செல்சியஸ் என்று அறிவிக்கப்பட்டது.கிளம்பியதில் இருந்து 4 மணி நேரத்தில்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் கால் பதித்தோம்.
தொடரும்.
.
No comments:
Post a Comment