நோக்கி நடந்தோம். சூடாக மசாலா பால் ஒரு கடையில் வெளியே தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதன் மணத்தால் கவரப்பட்டு அதை
வாங்கி அருந்தினோம்.அப்போது பாபா போல உடையணிந்த கம்பீரமான வட நாட்டு சன்யாசி வந்தார். வணக்கம் கூறி அவரிடம் பேசினோம்.தான் பிரயாகையில் இருந்து வந்துள்ளதாகக் கூறினார். தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். நாங்கள் பிறருக்காக் காத்திருந்தோம்.அப்போது ஒரு ஆசிரியை," கந்தம்மாள் டீச்சர்! அங்கே பாருங்கள்.இன்னோர் சன்யாசி உங்களைப் பார்த்து ஏதோ சொல்கிறார்" என்றார்.நான் அவரைப் பார்க்க அவர் தனது வயிற்றைத் தொட்டு இரு விரல்களைக் காட்டினார்.உண்மையான புகைப்படத்தில் காணப்படும் பாபாவைப் போல காட்சி அளித்தார். அதே போல உடை. கையிலே ஒரு கமண்டலம். மற்றவர்கள் அவரிடம் ஆசி பெறச் சென்றார்கள்.நான் திகைத்துப்போய் நின்று விட்டேன். சில ஆசிரியைகள் காணிக்கையாக பணம் தர அவர் மறுத்து விட்டு வேகமாக நடந்து சென்றார். பேரக்குழந்தை வரம் தந்து சென்றதாகத் தோன்றியது.பின்னர் பாபா சிலைகள் ,காப்புக் கயிறுகள்,பாபா படம் உள்ள சிறிய நாட்காட்டி அட்டைகள் , கற்கண்டு
போன்றவைகளை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
ஒரு அறையில் இருவர் தங்கினோம். AC மற்றும் குளியலறையில் ஹீட்டர் வசதிகள் இருந்தன.காலை எழுந்தவுடன் காஃபி தயாரிக்க வசதியாக சிறிய வாட்டர் ஹீட்டர் , காப்பித்தூள் , பால் பவுடர் ஆகியவை சிறிய பாக்கெட்களில் இருந்தன. தூங்கச் செல்லும் முன்பு அனைவரும் வரவேற்பு அறையில் கூடினோம். தலைமை ஆசிரியை," நாளை காலையில் 4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கிளம்பி விடுங்கள். மற்றவர்களுக்காக் காத்திருக்க வேண்டாம்.4,5 பேர் சேர்ந்து செல்லுங்கள்.8 மணிக்கு ஷீரடியில் இருந்து கிளம்பி விட்டால் மும்பையில் சில இடங்களைப் பார்க்கலாம்." என்றார்.அப்படியே செய்வதாகக் கூறினோம்.
மறுநாள் 4 மணிக்கு எழுந்து நீராடி காஃபி குடித்து கிளம்ப 5 மணி ஆகி விட்டது. எங்களுக்கு முன்பே ஒரு குழு சென்று விட்டது.ஓட்டமும், நடையுமாக விரைந்து சென்றோம்.காலையில் நடைபெறும் காக்கட் ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.உள்ளே சென்றவர்கள் அமர்ந்து விட்டதால் அரை மணிநேரம் வரிசையில் நின்றோம்.எங்களுக்கு நேராக பாபா ஒரு குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போல படம் வரையப்பட்டு
இருந்தது.என் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியையும் பேரக்குழந்தைக்காக வேண்டியிருந்தார்."பாபா நம்மை அவசரப்படாதீர்கள்.பொறுமையுடன் இருங்கள் என்று கூறுகிறார்" என்றார். ஆரத்தி முடிந்ததும் வரிசை வேகமாக நகர்ந்தது.பாபாவின் திவ்ய தரிசனம் கிடைத்தது.நன்கு ஆற அமர கண்ணார தரிசனம் செய்தோம். அடுத்து துவாரகா மாயிக்கும், சாவடிக்கும் செல்ல வேண்டும்.
தொடரும்.
No comments:
Post a Comment