நிறுவப் பட்டது.இன்னும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.ஏகப்பட்ட கார்கள்,ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தன.நாங்கள் அனைவரும் சேர்ந்து செல்வதற்காக எர்டிகா காரை அமர்த்திக் கொண்டோம்.அங்கிருந்து பயண நேரம் ஒன்றரை மணி நேரம் தான்.ஆனால் நடுவில் ரயில்வே லெவல் கிராஸிங்கில் அரை மணி நேரம் காத்திருந்தோம் எனவே மதியம் 2. மணிக்கு ஷீரடி வந்து சேர்ந்தோம். நாங்கள் Hotel golden view வில் தங்கினோம்.சரியாக பாபா கோவிலின் தங்கக்கோபுரத்திற்கு நேர் எதிரில் இருந்தது.ரூமில் இருந்து வெளியே வந்தால் கோபுர தரிசனம் கிடைத்தது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அல்லவா?
(என் வாழ்க்கைத் துணைவரின் தலைக்குப் பின்புறம் மஞ்சள் நிறத்தில் கோபுரம் தெரிகிறது.) அருகிலேயே உணவகமும் இருந்தது. மதிய உணவை முடித்து விட்டு ஒரு மணி நேரம் களைப்பாறினோம்.பின்னர் குளித்து விட்டு கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களைச் சுற்றி வந்தோம்.வெளியே வைக்கப் பட்டிருந்த பெரிய திரையில் பாபாவைக் கண்டோம்.
ஆன் லைனில் பாபாவின் தரிசனத்துக்கு இரவு 8 மணிக்குப் பதிவு செய்திருந்தோம்.எனவே 7.30 மணிக்கு முதல் வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றோம்.அரை மணி நேரத்தில் சாய் பாபாவின் எதிரில் நின்றோம். அருமையான குழந்தைகள் பிறந்ததற்காக நன்றி கூறினேன். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டினேன்.பாபாவையும் இந்தத் திருத்தலத்தையும் எனக்கு அறிமுகம் செய்த எங்கள் பள்ளித் தலைமைஅன்னை, தலைமை ஆசிரியை, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், மங்கையர்க்கரசி நிறுவனத்தின் ஆசிரியப்பெருமக்களும் நன்றாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன்.சில நொடிகளில் சலோ,சலோ என்று கூறி வெளியேற்றி விட்டார்கள். ஆயினும் மனம் நிறைவாக இருந்தது. கோவிலுடைய வெளிச்சுற்று .முற்றிலும் மாறிவிட்டது.நிறைய இரும்புத் தடுப்புகள் அமைக்கப் பட்டி.ருந்தன. கசப்பில்லா இலைகள் கொண்ட வேப்பமரத்தைச் சுற்றி இரண்டாவது தடுப்பு வேலியும் அமைக்கப் பட்டிருந்தது.பழைய இயற்கையான அமைப்பு மாறிவிட்டது. சன்னதியில் இருந்து வெளியே வரும் வழியில் உதி வழங்கப்பட்டது. பிரசாத ஸ்டாலில் லட்டுகளை வாங்கினோம்.நவராத்திரி விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டமும் மிக அதிகம்.மறு நாள் காலை 7 .30 மணிக்கு சனிசிங்கணாப்பூர் செல்லவும் மதியம் 3 மணிக்கு Devotional theme park செல்லவும் முடிவு செய்தோம்.
தொடரும்.
No comments:
Post a Comment