கோதுமை முழுவதும் சாய்பாபா கோவிலின் அன்னதானக் கூடத்திற்கு வழங்கப் படுகிறது. பிரசாதமாகப் பெற்ற கோதுமையை உணவுடன் சேர்த்து உண்டால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.இதைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் செல்ல சுற்றித் தான் செல்ல வேண்டிதாயிற்று.
மதிய உணவை முடித்துவிட்டு 2 மணிக்குக் கிளம்பினோம். ஷீரடி சாய் பாபா கோவிலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் விமானநிலையம் இருந்தது.
3.40 மணிக்குக் கிளம்பும் விமானத்தில் ஏறி மாலை ஆறு மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.விமான நிலையத்திலும் கூட்டமாகத் தான் இருந்தது.பெங்களூர் , தில்லி ஆகிய ஊர்களுக்கும் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஷீரடியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன. புதிய விமான நிலையம் ,நகர்சோலில் ரயில்நிலையம்,Devotional theme park,water theme park என புதிய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.இருமுறை ஷீரடியில் சாய் பாபாவைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்று விட்டேன்.குடும்பத்தினர் அனைவருடனும் மேற்கொண்ட பயணம் பாபாவின் அருளால் இனிதே நடந்தேறியது.

முற்றும்.
No comments:
Post a Comment