ஷீரடி வந்த போது இந்த இடம் அமைக்கப் படவில்லை.2018ஆம்
தான் உருவாக்கப் பட்டுள்ளது.
அனைவருக்கும் கையில் ஒரு பேப்பர் பெல்ட் கட்டி விட்டார்கள். முதலில் திரைஅரங்கத்திற்குள் அனுமதித்தார்கள்."ஸப் கா மாலிக் ஏக் ஹை" என்ற தலைப்பில் படம் காட்டப்பட்டது. சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ஒரு மணி நேரம் திரையிடப் பட்டது.நேரம் போனதே தெரியவில்லை. அடுத்ததுதான் நிகழ்ச்சிகளில் மிக அருமையான ஒன்று.5 D தியேட்டரில் 5 D படம் "லங்கா தஹன்" என்ற தலைப்பில் ஓடியது. உள்ளே நுழையும் போதே 5 D பார்க்கத் தேவையான கண்ணாடிகளைத்
தந்தார்கள்.மாட்டிக் கொண்டு
ஆங்கிலத்திலும்,இந்தியிலும் முன்னெச்சரிக்கை செய்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள்,கழுத்துத் தேய்மானம் உள்ளவர்கள் சாதாரண நாற்காலிகளில் அமர
வேண்டும்.பிறர் அதிர்வு அடையக் கூடிய நாற்காலிகளில்
அமரலாம்.குழந்தைகள் பயப்பட்டால் கண்ணாடியை கழற்றி விடவேண்டும் என்று அறிவித்தார்கள்.
திரைப்படம் கன ஜோராகத் தொடங்கியது. அலைகடலுக்குள் நாங்களே புகுந்து விட்டோம்.அலை எங்கள்
முகத்திலேயே அடித்தது. ஆஞ்சனேயர் "ஜெய்ஸ்ரீராம்" என்று கூறி பறக்க ஆரம்பிக்க நாங்களும் பறந்தோம். நாற்காலிகளின் அதிர்வும், அசைவும் மிகப் பொருத்தமாக இருந்தன.மைநாகமலையில் கால் பதித்தோம். நாகதேவர்களின் தாயாகிய ஜிரஜா பெரிய நாகவடிவில் வந்து ஆவென வாயைத் திறக்க பார்வையாளர்களையே விழுங்கி விடுவாளோ எனத் தோன்றியது.அனுமானுடன் நாங்களும் நாகத்தின் வாய் வழியே சென்று வால் வழியாக
வெளிவந்தோம்.அடுத்து ஓர் அரக்கியின் வாய்க்குள் நுழைந்து மார்பைக் கிழித்து வெளியே வந்தோம். லங்கா தேவியுடன் நடந்த சண்டை, சீதாதேவியைக் கண்டு கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றது என அனைத்து நிகழ்வுகளிலும் நாங்களும் கூடவே இருந்தது போல் இருந்தது. பிரம்மாஸ்திரத்தில் கட்டுண்டு
இராவணனின் சபையை அடைந்தது,வாலில் தீ வைத்தது எனக் காட்சிகள் விரிந்தன. நிறைவுக் காட்சியில் இலங்கை பற்றி எரிந்தது.மக்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள்.யானை பிளிறிக் கொண்டு எங்களைத் தாக்க வந்தது.ஆஞ்சநேயர் கடல் நீரில் வாலை நனைத்து நெருப்பை அணைக்க காட்சி
நிறைவு அடைந்தது. மிக அருமையான புதிய தொழில் நுட்பங்களுடன்,மிகச் சிறப்பான
ஒலி,ஒளிக் காட்சிகளுடன் அற்புதமாக இருந்தது. அடுத்து துவரகா மந்திர் என்ற திரைப்படத்தைப் பார்க்கவும், தீர்த்த யாத்திரை செல்லவும் வேண்டும்.
தொடரும்.
No comments:
Post a Comment