வாசலுக்குப் போகச் சொன்னார்.அப்படியே செய்தோம். வரிசையாக நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிக்குள் நின்றோம்.ஒரு மணி நேரம் வரிசை துளி கூட நகரவில்லை.7.30 மணியும் ஆகிவிட்டது.குழந்தைகள் பசிக்கிறது எனக் கூற ஆரம்பித்து விட்டார்கள். நான் கண் மூடி, "பாபா இது என்ன சோதனை?4 குழந்தைகளுடன் வந்திருக்கிறேன்.சீக்கிரம் வழி விடுங்கள்."என மனதார வேண்டினேன்.வரிசை நகர ஆரம்பித்தது.முன்னால் சென்ற பக்தர்கள் சாய் நாத் மகராஜ் கீ ஜய் எனக்கூற முதல் மூன்று குழந்தைகளும் ஜய் ஜய் எனக் கூறிக்கொண்டே நடந்தனர்.பசி பறந்து போய்விட்டது. சாய் ஸ்ரீ ராம் , "ஓம்சாய் நமோ நமஹ!" என முன்னால் பாடிக் சென்றவரைத் தொடர்ந்து பாடிக் கொண்டே வந்தான்.கடைக் குட்டிகள் இருவரையும் பெற்றோர் தூக்கிக் கொண்டனர்.ஆங்காங்கு அரை மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.பத்து மணிக்குத் தான் தரிசனம் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் இரு இடங்களில் எங்களைக் குறுக்கு வழியில் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.சரியாக எங்கள் குடும்பம் வரும்போது தான் அக்கதவுகள் திறக்கப் பட்டன.பாபாவின் அருளை எண்ணி வியந்தேன். சாய்பாபாவின் முகதரிசனம் கிடைத்தது. நன்கு வணங்கினேன். வார்த்தைகள் ஏதும் மனதில் தோன்றவில்லை.சில நொடிகளில் சலோ, சலோ என்று வெளியே அனுப்பி விட்டார்கள். 8.50 க்கு வெளியே வந்து விட்டோம்.மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. துவாரகாமாயி,சாவடி, அருங்காட்சியகம் என எதற்கும் செல்ல முடியவில்லை. இத்தனை கூட்டத்திற்குக் காரணம் என்ன என்பது பின்னர் தான் தெரிந்தது.அன்று சாய் பாபா மஹாசமாதி அடைந்த திதி ஆகும்.சிறப்பு பூஜைகள், ஊர்வலம் நடந்த பின்தான் பக்தர்கள் உள்ளே அனுதிக்கப் படுவார்களாம்.இரவு முழுவதும் பாபாவைத் தரிசிக்கலாம். கோவில் கதவுகள் மூடப்படுவதில்லை என்றும் தெரிந்து கொண்டோம்.மிகச் சிறப்பான நாளில் பாபாவை வணங்க வாய்ப்புக் கிடைத்தது நாங்கள் பெற்ற பாக்கியமாகும்.அடுத்து பிக்ஷா ஜோலி என்ற நிகழ்ச்சி நடந்தது.
தொடரும்.
No comments:
Post a Comment