பின்பே என் மகன் வழிப் பேத்தி
பிறந்தாள்.மகளுக்கும் இரண்டாவது மகன் பிறந்தான்.
எனவே சாய்பாபாவைத் தரிசிக்க சீரடிக்குப் பயணம் செய்தோம்.
என் மகன் சங்கர் காளிதாஸும் ,South carnivals என்ற Travels நடத்தும் என் தம்பி மகன் சங்கர நாராயணனும் இணைந்து அருமையாக முன்னேற்பாடுகள் செய்திருந்தனர். அக்டோபர் 2ஆம் தேதி காலை 9.மணி 10 நிமிடத்தில் சென்னை-நகர்சோல் எக்ஸ்பிரஸில் பயணம் தொடங்க வேண்டும்.சென்னை -ஷீரடி ரயிலில் இடம் கிடைக்கவில்லை.நகர்சோல்
ரயிலில் சமையலறை ,pantry car கிடையாது. எனவே அதிகாலை 3மணிக்கே நான்,என் மருமகள்,மகள்,மருமகன் என அனைவரும் சேர்ந்து சமையல்
களத்தில் இறங்கினோம்.இட்லி,வறுத்து அரைத்த துவையல், சப்பாத்தி,தக்காளித் தொக்கு, எலுமிச்சை சாதம்,தயிர்
சாதம் என அனைத்தும் தயாரானது.எல்லாவற்றையும் அலுமினிய ஃபாயில் டப்பாக்களிலும், பேப்பரிலும் வைக்கும் பொறுப்பை என் கணவர்ஏற்றுக்கொண்டார்.
நான்கு குழந்தைகளையும் சமாளிக்கும்
பொறுப்பை என் மகன் பார்த்துக்
கொண்டான்.ஆறு மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்து விட்டோம். 9.10 ரயிலுக்கு 7.15 க்கே சென்ட்ரல் நிலையத்திற்கு வந்து விட்டோம்.
ரயில் வரும் முன்னரே
ஒருவர் பசிக்கிறது எனக் கூற மற்ற மூன்று பேரும் சேர்ந்து கொண்டார்கள்.அவர்களைச் சாப்பிட வைத்தோம்.சரியாக 9.10க்கு ரயில் கிளம்பியது. நாங்கள் ரயில் கிளம்பிய பின் காலை உணவை முடித்தோம்.27 மணி நேரப் பயணம். சாய் ஸ்ரீராம்,சாய்ஸ்ரீகாந்த்,ரஷிதா,ஸ்ரீநிதி என்ற நான்கு பேரக்குழந்தைகளும் உற்சாகமாக இருந்தனர்.இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி என்பதால் வசதியாக இருந்தது.அரக்கோணம் வந்தவுடன் முழுமையாக அனைைத்து இடங்களும் நிரம்பின.நால்வரும் சிறிது நேரம் தூங்கினார்கள்.வழியில் தால் வடா என விற்றுக் கொண்டு வந்தார்.நான் ஆசையுடன் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம் என்றவுடன் மறுமகன் வாங்கித்
தந்தார்.அதில் முட்டைக்கோஸ்
மட்டுமே இருந்தது.வெங்காய துண்டு கூட சிறிதுதான் இருந்தன.இரவு வரை வைத்திருந்து காலி செய்தோம்.மதிய உணவிற்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.குழந்தைகள் பார்க்க Mr.Beans சீரியலை என் மகன் பதிவிறக்கம் செய்து மடிக்கணினியைக் கொண்டு வந்திருந்தான். அதை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.இரவு குழந்தைகள் நன்கு தூங்கி விட்டனர்.நானும் தூங்கிவிட்டேன்.11மணியளவில் ஹைதராபாத்தைக் கடந்ததாக மகன் கூறினான்.காலை 5 மணிக்கு நான் கண் விழித்த போது மகாராஷ்ட்ரா BSNL வரவேற்பதாக செல்ஃபோன் காட்டியது. வழியில் சிறுஊர்கள் தான் இருந்தன.காலை உணவாக சப்பாத்தியும் ,தக்காளித் தொக்கும் எடுத்துக் கொண்டோம்.காலை 10 மணியளவில் பெரிய ஊராகிய ஔரங்காபாத் நகரம் வந்தது.பிள்ளைகள் சற்று சோர்வடைந்ததால் டான் படம் ஓடியது.முழுமையாகப் பார்க்க முடியவில்லை. மீதம் இருந்த சப்பாத்திகளை பிள்ளைகளுக்குக் கொடுத்தோம்.11.45 க்கு நகர்சோல் வந்து சேர்ந்தோம்.
தொடரும்.
Very interesting teacher!! Eager to next part🙏
ReplyDelete