இரண்டாம்நாள் காலை எழுந்து ஜன்னலைத் திறந்த போது மேகமா?பனிமூட்டமா?என்று தெரியவில்லையே என எண்ணினோம்.புகையின் வாசம் வந்தது.TV ஐப் போட சிட்னியில் இன்று புகை மூட்டம் காணப்படும் என செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தது.வாங்கி வந்த சுவாசக் கவசத்தை அணிய மனமில்லை.முன்தினம் இரவு சப்பாத்தி சாப்பாட்டிருந்தோம். காலையில் பிரட். மதிய உணவிற்கு மைக்ரோ வேவ் ஓவனில் சாதம் வைத்தோம்.தயிர் ,எலுமிச்சை ஊறுகாய், சிப்ஸ், ஒரு முறை பயன்படுத்தும் லஞ்ச் பாக்ஸ் ஆகியவை ஓட்டலின் எதிரில் இருந்த Woolworths கடையில் கிடைத்தது. தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.
முக்கிய இடங்கள் எல்லாம் ஒரே பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தோம்.முதலில் அக்வேரியத்திற்குள் நுழைந்தோம். நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தையும் இங்கு பராமரித்து வருகிறார்கள். சிறிய பென்குவின் பறவைகளைக் கண்டோம்.
பென்குவின் பற்றிய தகவல்களை ஒரு பணியாளர் விளக்கிக் கூறினார்.இதனுடைய இறக்கைகள்பறக்கப் பயன்படாமல் நீரில் நீந்த
துடுப்புகளாக பயன்படுகின்றன. அதிக ஆழத்திற்குச் செல்லாமலே இரையைத் தேடிக் கொள்கிறது. இங்கு இருப்பவை 33செ.மீ உயரமான சிறிய பறவைகள்.மற்றோர் பகுதியில் பெரிய பென்குவின்கள் இருந்தன.பல வகையான மீன்களைக் கண்டோம்.அனிமோன் என்ற நீர் வாழ் உயிரியை இன்றுதான் பார்த்தேன்.Star fish,jelly fish,seahorse என பல வகையான மீன்கள் இருந்தன.
குகை போன்ற அமைைப்பில் நாம் நடந்து கொண்டே இருபுறமும், மேல்புறமும் மீன்கள் நீந்துவதைக் காணலாம்.இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் இது போன்று VGP marine world அமைக்கப் பட்டுள்ளது.சிட்னியில் உள்ள under water world பெரியதாக உள்ளது. இங்கு tunnelன் மேல்பகுதியை மாடியில் இருந்து காணலாம்.
Sub Antarcticaவில் வசிக்கும் பென்குவின்கள் இங்கு 6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வளர்க்கப் படுகின்றன.கடல்நீர் போன்ற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.நாம் சிறிய படகில் ஏறி சுற்றி வந்து பென்குவின்களைக் காணலாம்.
இது சிவப்புநிறப் படகில் சுற்றிப் பார்த்தபோது என் வாழ்க்கைத் துணைவர் எடுத்த படம்.கண்ணாடிச் சுவரில் புகைப்படம் எடுக்கும் அவரின் தோற்றமும், என் தங்கை மகளின் தோற்றமும் பிரதிபலிக்கிறது.
Darwin's lab என்ற பகுதியில் சிறுவர்,சிறுமியர் உட்கார்ந்து விளையாட ஒரு டென்ட் அமைக்கப் பட்டுள்ளது.பவளப் பாறைத் துண்டுகள்,ஷார்க் மீன்களுடைய முட்டைகள் ஆகியவற்றைக் கையில் எடுத்துத் தொட்டுப் பார்க்கலாம்.ஒரு மைக்ரோஸ்கோப் வைக்கப் பட்டுள்ளது.அதில் வைத்தும் பார்க்கலாம்.
மணலில் புதைக்கப்பட்ட டயனோசரின் மாதிரி ஃபாஸிலைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி ஒரு இடம் இருந்தது.சிறுவர்,சிறுமிகள் அதில் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.Jurrasic seas என்ற பிரிவில் பழங்காலத்தில் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எலும்புக்கூடுகள் இருந்தன.
Dugong island என்ற பகுதியில் டுகாங் என்ற மீன்களைப் பார்த்தோம்.பெரியதாக உள்ள இந்த மீன் பாலூட்டி வகையைச் சார்ந்தது.கடல்பாசியையும்,கடல் தாவரங்களையும் உண்ணுமாம். இதைக் கடற்பசு என்றும் ஆவுளியா என்றும் தமிழில் கூறுவார்கள் .
பள்ளி விடுமுறை காலத்தில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலை பார்க்கும் பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்செல்லக் கூடாது. எனவே குழந்தைகளைக் காப்பகங்களில் சேர்க்க வேண்டும்.நிறைய காப்பகங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தன.வேறுவேறு நிறச் சீீருடைகளில் பார்க்க அழகாக இருந்தது.ஆசிரியப் பணியாற்றிய காலத்தை நினைவு படுத்தியது.
தொடரும்

No comments:
Post a Comment