பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள ஆற்றுப்
பாலங்களில் ஒன்று story bridge. அதைப் பார்க்க எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று மைத்துநர் விரும்பினார்.நாங்கள் விக்டோரியா பாலத்தைப் பார்த்து விட்டோமே எனக் கூறி விட்டோம்.இந்தியாவிற்குத் திரும்பும் முன்பு சிறிய மைத்துநர் வீட்டிற்குச் சென்று விடை பெற்று வரவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஜனவரி 26ஆம் நாள் ஆஸ்திரேலிய தினமாகக் கொண்டாடப் படுகிறது.அது ஞாயிற்றுக் கிழமை என்பதால் 27 ஆம் தேதி திங்கள் கிழமை தேசிய விடுமுறை விடப்பட்டது.அன்று சிறிய மைத்துநர் எங்கள் அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.எனவே நாங்கள் அங்கு சென்றோம்.சிறிய தங்கை, மைத்துநர் மற்றும் மகன்கள் ஆகியோருடன் உரையாடினோம். மதிய விருந்து அருமையாக இருந்தது.பின்னர் விடைபெற்றுக் கிளம்பினோம். மைத்துநர் முருகன் Story bridgeக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் பாலம் முழுவதும் இரும்பு, எஃகு ,சிமென்ட் கலவையால் உருவாக்கப் பட்டுள்ளது.இதைக் கேள்விப்பட்டதும் மதுரை மணிநகரத்தில் உள்ள சிறிய ரயில் பாலத்தை கர்டர் பாலம் என்று கூறுவது நினைவுக்கு வந்தது. Girder bridgeல் மரமும் இவற்றுடன் பயன்படுத்தப்படும் எனத் தெரிந்தது.இந்தப் பாலம் 1940 ல் பயன்பாட்டுக்கு வந்தது.777 மீட்டர் நீளமும், 24 மீட்டர் அகலமும்,74 மீட்டர் உயரமும் கொண்டது.இதன் மேல் பகுதியில் தக்க பாதுகாப்புடன்
(Downloaded picture)
இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.Day climb,night climb, cantilever climb,plank climb என பல நடைப்பயணங்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ஒரு பெல்ட் அணிந்து கொள்ள அது கைப்பிடி ஓரமாக ஏறுபவர்களுடன் நகர்ந்து கொண்டே வருமாம். இது பாதுகாக்க மட்டும் அல்ல.தற்கொலையைத் தடுக்கவும் தான்.கூடவே ஒரு வழிகாட்டியும் வருவார். Abseiling என்று பாலத்தின் உச்சியில் இருந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு கீழே இறங்குகிறார்கள்.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சாகசச் செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
CLOCK TOWER TOUR
பிரிஸ்பேன் சிட்டி ஹாலை ஏற்கனவே பார்த்து விட்டோம். அங்குள்ள கடிகாரக் கூண்டைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்பதை அங்கு சென்ற பின்தான் அறிந்தோம்.ஆன் லைனில் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.ஒரு குழுவில் ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதைப் பார்க்கவில்லை.எனவே தங்கை ரமணாவும்,மைத்துநரும் அங்கு அழைத்துச் செல்ல விரும்பினர்.ஆன்லைனில் பதிவு செய்து மாலை 3.30 க்கு அங்கு பார்வையிட அனுமதி பெற்றோம். மைத்துநர் பணிக்குச் சென்று விட்டார்.நாங்கள் ஐவரும் கிளம்பினோம்.பேருந்து சரியான நேரத்திற்கு வந்து விடும்.எனவே காலஅட்டவணையைப் பார்த்து சரியான நேரத்திற்கு பேருந்தில் ஏறி சிட்டி ஹாலுக்குச் சென்று விட்டோம்.
வழிகாட்டிப் பெண்மணி வந்து அழைத்துச் சென்றார்.சரியாக ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டோம். மூன்றாவது தளத்தில் இருந்து மேலும் ஒரு தளத்திற்கு படிக்கட்டில் ஏறிச் சென்றோம்.அதன் பிறகு ஒரு மரத்தால் ஆன பழைய லிஃப்ட்டில் ஏறினோம்.கட்ட ஆரம்பித்த போது பொருட்களை ஏற்றக் கட்டப்பட்ட இந்த லிஃப்ட் மின்சாரத்தால் இயக்கப் படுவதில்லை.பழைய இயந்திரத்தால் இயக்கப் படுகிறது.
கடிகாரமணி அடிக்க உதவும் கருவியைப் பார்த்தோம். Master clock என்ற பெண்டுலம் உள்ள கடிகாரம் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள நேரத்தைத் தான் பெரிய கடிகாரம் காட்டுமாம்.
தரையில் இருந்து 87.47 மீீட்டர் உயரத்தில் உள்ளது.அதற்கு மேல் Observation deck உள்ளது.தூண்கள் அமைந்துள்ள அந்த சிறிய இடத்தைச் சுற்றி வந்தோம்.
அங்கிருந்து பிரிஸ்பேனின் கட்டிடங்களின் அழகை ரசித்தோம்.
பிரிஸ்பேன் மியூசியம் உள்ளது. நாங்கள் இருவரும் மீண்டும் அதைப் பார்த்தோம்.இம்முறை நிறைய படங்கள் எடுத்தோம்.
நின்று நிதானமாக ரசித்தோம். வரும்போது அடிலெய்டு வீதி வழியாக வந்தோம்.வீட்டிற்குத் திரும்பும் போது Queen street mallஐப்
பார்த்துக் கொண்டே வந்தோம்.Bus station சுரங்கத்தில் அமைந்துள்ளது. பயணிகள் காத்திருக்க வேண்டிய பகுதியும் மாலின் ஒரு பகுதியில் மூடிய கதவுகளுடன் இருந்தன. நாங்கள் பேருந்தில் ஏற வேண்டிய இடத்தை அங்குள்ள display ஐப் பார்த்து அறிந்து கொண்டோம். பேருந்தின் எண்ணுடன் அது எத்தனை நிமிடங்களில் வரும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். பயணிகள் அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். குளுகுளு பேருந்தில் ஏறி மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தோம்.
தொடரும்.
No comments:
Post a Comment