ஓப்ரா ஹவுஸிற்கு அருகிலேயே தோட்டம் அமைந்துள்ளது.
அருகில் சென்று தகவல் பலகையைப் பார்த்தோம்.புழு பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டோம்.
Calyx என்ற பகுதியில் இவை உள்ளன.
Veenus fly trap
Utricularia
இதில் ஆயிரக்கணக்கான carnivorous தாவரங்கள் உள்ளன. மாடிப்படிகளில் ஏறி இறங்கியதில் அனைவரும் களைப்பு அடைந்து விட்டோம். ஏற்கனவே பிரிஸ்பேனில் பொட்டானிக்கல் கார்டனைப் பார்த்திருந்தோம்.இங்கு 74 ஏக்கர் பரப்பில் பொட்டானிக்கல் கார்டன் உள்ளதை அறிந்ததும் நடக்க மலைப்பாய் இருந்தது.சுற்றிப் பார்க்க choo choo என்ற ஒரு ரயில் வண்டி உள்ளது.அதற்கு சற்று நேரம் காத்திருந்தோம்.பின் அதில் ஏறினோம்.டிரைவர் ஆங்காங்கு நிறுத்தி விளக்கம் தந்தார்.
காலையில் பிரட் டோஸ்ட் செய்து சாப்பிட்டோம்.மதிய உணவிற்கு இந்திய உணவகத்தின் இருப்பிடத்தை தங்கை ரமணா ஆன் லைனில் கண்டு பிடித்திருந்தாள். நடந்து செல்லக்கூடிய தூரத்தில் Philip street என்ற இடத்தில் The spice room அமைந்திருந்தது.
சாதம்,பருப்பு, வெஜிடபிள் குருமா,அப்பளம் ஆகியவற்றை ஆர்டர் செய்தோம்.பாஸ்மதி அரிசி சாதம், தக்காளி, மிளகாய் போட்டு தாளித்த பருப்பு வந்தது. சுவையான, அருமையான உணவு.சிட்னியில் இப்படி சாப்பாடு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. வயிறார சாப்பிட்டு ஊழியருக்கு மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.
ஹம்பி கோயிலின் உட்பிரகார மேற்கூரையின் அமைப்பும் இருந்தது.
அங்கோர்வாட் கோவிலின் பழைய படமும் இருந்தது. ஏகப்பட்ட படங்கள் இருந்ததால் முழுவதையும் பதிவு செய்ய இயவில்லை.பழைய வயலின் ஒன்றும் உள்ளது.அருகே உள்ள இயர்ஃபோனை மாட்டிக் கொண்டால் இசையைக் கேட்கலாம்.குழந்தைகள் விளையாட ஒரு பெரிய அறை உள்ளது.பொம்மைகள் நிறைய இருந்தன.காட்சிப் பொருட்களின் சிறு பகுதியை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்.
சாதம்,பருப்பு, வெஜிடபிள் குருமா,அப்பளம் ஆகியவற்றை ஆர்டர் செய்தோம்.பாஸ்மதி அரிசி சாதம், தக்காளி, மிளகாய் போட்டு தாளித்த பருப்பு வந்தது. சுவையான, அருமையான உணவு.சிட்னியில் இப்படி சாப்பாடு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. வயிறார சாப்பிட்டு ஊழியருக்கு மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.அதன் பின்பு சிட்னி மியூசியத்திற்குச் சென்றோம். ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர்கள் குடியேறியவுடன் அரசாங்கம் கட்டிய அலுவலகம் (Government house) இருந்த இடத்தில் இந்த மியூசியம் உள்ளது.இதில் நுழைந்ததும் மாதிரிக்
கப்பல்களைப் பார்த்தோம்.தாமஸ் குக் பயணத்திற்குப் பயன்படுத்திய கப்பல் மற்றும் அடுத்து வந்த கப்பல்களின் மாதிரிகள் உள்ளன.
பழைய கவர்ன்மென்ட் ஹவுஸின் மாதிரி வடிவம் இருந்தது.அதன் அடிப்பகுதியில் கட்டிடத்தில் இருந்த கற்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது.முன்புறம் வெளியே முக்கோண அமைப்பின் அடியில் பழைய கட்டிடத்தின் பேஸ்மென்டின் சிறு பகுதி பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளது.
பழங்காலத்து பெரிய கட்டிடங்களின்
படங்கள் மாட்டப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளின் கட்டிடங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.நம் நாட்டில் ஹம்பியில் எடுக்கப்பட்ட ஹம்பி விநாயகர் மண்டபத்தின் படம்,மற்றும் அனுமான் மண்டபத்தின் படமும் இடம் பெற்றிருந்தது.
ஹம்பி கோயிலின் உட்பிரகார மேற்கூரையின் அமைப்பும் இருந்தது.
அங்கோர்வாட் கோவிலின் பழைய படமும் இருந்தது. ஏகப்பட்ட படங்கள் இருந்ததால் முழுவதையும் பதிவு செய்ய இயவில்லை.பழைய வயலின் ஒன்றும் உள்ளது.அருகே உள்ள இயர்ஃபோனை மாட்டிக் கொண்டால் இசையைக் கேட்கலாம்.குழந்தைகள் விளையாட ஒரு பெரிய அறை உள்ளது.பொம்மைகள் நிறைய இருந்தன.காட்சிப் பொருட்களின் சிறு பகுதியை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்.
தொடரும்

No comments:
Post a Comment