பிரிஸ்பேனில் தங்கையின் வீட்டில் இருந்து காரில் கிளம்பினோம். அரைமணி நேரத்தில் விமானநிலையத்திற்கு வந்து விட்டோம். பள்ளி விடுமுறை என்பதால் கூட்டம் நிறைய இருந்தது. Tigerair விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கி இருந்தோம். செக்யூரிட்டி செக் செய்த போது தங்க வளையல்களை கழட்டி செல்ஃபோன் வைக்கும் ட்ரேயில் வைக்க அவை ஸ்கேன் செய்யப்பட்டன.பிறகு அதை பத்திரமாக எடுத்து அணிந்து கொண்டோம்.கேபின் பைகளின் எடையை சோதித்தார்கள். மாலை 4.55க்கு விமானம் கிளம்ப வேண்டும்.ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் என அறிவிப்பு வந்தது.ஆனால் 5.40க்கு கிளம்பி விட்டது.
டைகர்ஏர் உள்நாட்டு விமானத்தில் 180 பேர் அமர வசதி இருக்கிறது.விமானம் நிரம்பி வழிந்தது.நம் ஊரில் பேருந்தில் பயணம் செய்வது போல் இருந்தது. ஒன்றரை மணி நேரத்தில் சிட்னி வந்து சேர்ந்தோம். விமானத்தில் இருந்து பார்க்கும்போது கீழே இருந்த
சிட்னி விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு மழை பெய்து ஓய்ந்திருந்தது.விமானம் சிட்னி அருகில் வந்தபோது மேகக்கூட்டங்களுக்கு இடையே சென்றதைக் காண முடிந்தது. இதனால்தான் விமானம் தாமதமாகக் கிளம்பியிருக்கக் கூடும் என நினைத்தேன். விமானத்தில் இருந்து இறங்கும் போது மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. அங்கிருந்து காரில் மைத்துனர் முருகன் ரிசர்வ் செய்திருந்த Macleay hotelக்கு வந்து சேர்ந்தோம். ஆஸ்திரேலியாவின் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீ காரணமாக சிட்னியில் சில நேரங்களில் புகை மூட்டம் காணப்படுகிறது.எனவே மைத்துனர் எங்கள் ஆறு பேருக்கும் சுவாச முகமூடி பிரிஸ்பேனிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து விட்டார். ஹோட்டலில் அறையில் சிறு சமையல் அறை இருந்தது. இது எனக்குப் புதுமையாய் இருந்தது.மைக்ரோவேவ் ஓவன், இன்டக்சன் ஸ்டவ், கெட்டில், டோஸ்டர்,பீங்கான் தட்டுக்கள், பாத்திரங்கள்,கண்ணாடி டம்ளர்கள் மற்றும் இரண்டு சில்வர் பாத்திரங்கள் மூடியுடன் இருந்தன.ஒரு சிறிய ஃபிரிட்ஜ் ஒன்றும் இருந்தது.பாத்திரங்களைக் கழுவ ஸிங்க்,லிக்விட் கிளீனர்,ஸ்கரப் ஆகியவைகளும் இருந்தன.
பெண்கள் நால்வரும் தங்கிய அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் கடலும்,அதில் நிறுத்தப் பட்டிருந்த படகுகளும் தெரிந்தன.
பிரிஸ்பேன் இந்தியன் ஸ்டோர்ஸில் இருந்து ரெடி டு ஈட் சப்பாத்தி மற்றும் குருமா வாங்கி வந்திருந்தோம். இரவு அவற்றை ஓவனில் சூடுபடுத்தி சாப்பிட்டோம். மறுநாள் ஒபரா ஹவுஸ் செல்லத் திட்டமிட்டோம்.
தொடரும்
No comments:
Post a Comment