Tuesday, January 14, 2020

கங்காரு தேசம் 24

MADAME TUSSUAD 
இந்த மியூசியம் உயிரோட்டத்தோடு காணப்படும் மெழுகுச் சிலைகளுக்கு
உலகப்புகழ் பெற்றது. லண்டனிலும் நியூயார்க்கிலும் மட்டுமே உள்ளதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 13 ஆவது மியூசியமாக சிட்னியில் அமைக்கப் பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவிற்கு வந்த பின்புதான் தெரிந்து கொண்டேன். அது மட்டுமல்லாமல் நம் இந்தியாவின் தலைநகராகிய புது தில்லியில் 2017ல் அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிந்தது. Aquariumக்கு அடுத்து  இந்த மியூசியம் அமைந்துள்ளது. இங்கு கற்பனைக் கதாபாத்திரங்களான Superman, spiderman, ironman, batman, wonderwoman ஆகியவற்றின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
(Spider man)
(Superman)
(Batman)
                 ( Wonder woman)
புத்தமதத் தலைவர் தலாய் லாமா,ஆஸ்திரேலியாவிற்கு முதன்முதலாக வந்த மாலுமி ஜேம்ஸ்குக் ஆகியோர்களின் சிலைகள் இடம் பெற்றிருந்தன. நம்
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவம் காட்சி அளித்தது. அதன் அருகே நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் சிலை இருந்தது
ஆப்பிரிக்காவின் மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையும் இருந்தது. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான
மெக்ராத், ஷேன்வார்னே ஆகியோர்களுடன் நம் சச்சின் டென்டுல்கர் இருந்தார்.
டிஸ்கவரி சேனலில்  பிரபலமான தொகுப்பாளராக முதலைகளுடன் காட்சியளித்தவர் ஸ்டீவ் இர்வின். இவர் ஸ்டிங்ரே மீனால்  தாக்கப்பட்டு உயிர் நீத்தார். அவர் நடத்திவந்த Zoo இப்பொழுது  அவரது துணைவியாரால் நடத்தப்படுகிறது. இர்வினுக்கும் இங்கு சிலை உள்ளது.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின் இடம் பெற்றிருந்தார்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய்,ப்ரியங்கா
சோப்ரா ஆகியோர் உருவங்கள் இருந்தன.
இங்கிலாந்து  மகாராணியின்  குடும்பமும் இருந்தது.அவர்களுக்கு நடுவே போடப்பட்டிருந்த சோபாவில்  அமர்ந்து பலரும்  ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.  ஓப்ரா வின்ஃப்ரி என்ற அமெரிக்காவின் TV புகழ் தொகுப்பாளினி மற்றும் சமூகசேவகியின் சிலை அருகே அமர்ந்து படம் எடுத்தோம்.

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற,பழம்பெரும்,மறைந்த நடிகை மர்லின் மன்ரோவிற்கும்  சிலை இருந்தது. Extra terrestrial சினிமாவில் வரும் E.T என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் பின்னால் தங்கையின் மகளை நிற்கச் செய்து படம் எடுத்தோம்.

கூட்டம் மிகுந்து இருந்ததால் நின்று நிதானமாகப் பார்க்க முடியவில்லை. ஃபோட்டோக்களும் குறைவாகவே எடுத்தோம்.மதிய உணவை உண்ட பின் Maritime museumத்தை நோக்கி நடந்தோம்.
                     தொடரும் 






No comments:

Post a Comment