Saturday, December 7, 2019

கங்காரு தேசம் 10

WHEEL  OF   BRISBANE
மியூசியத்தில் இருந்து பிரிஸ்பேன் ஆற்றங்கரைக்கு நடந்து வந்தோம்.
வழியில் உள்ள இடங்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். சிறிது தூரத்தில்  பெரிய சக்கரம் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. சித்திரைப் பொருட்காட்சியில் நாம் காணும் ஜெயன்ட் வீல் போல இருந்தது.இதில் ஏறிப் பயணம் செய்ய முடியுமா? தலை சுற்றுமா? எனப் பல சந்தேகங்கள் தோன்றின. சக்கரம் மெதுவாகத்தான் சுற்றும்.பயப்பட வேண்டாம் என்று மைத்துனர் ஏற்கனவே கூறியிருந்தார்.மூத்த மகள் தான் எங்களது வழிகாட்டி.ஆஸ்திரேலிய ஆங்கிலம் எனக்குப் புரியவில்லை. மிக வேகமாகப் பேசுகின்றனர். நாங்கள்  சக்கரத்தின் அருகில் நின்றோம்.பிரமிப்பாக இருந்தது.அங்கிருந்த பணியாளர் எங்களை  அமர வைத்து கண்ணாடிக்
கதவுகளை மூடினார்.சக்கரம் சுழலஆரம்பித்தது.          
   
 உச்சியில் சில நிமிடங்கள் நின்றது.  
அங்கிருந்து பிரிஸ்பேனின் பல பகுதிகளைக் காண முடிந்தது.               

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அதில்சுற்றினோம்.பின்னர் தரை இறங்கினோம்.நாங்கள் ஏறும் முன்பு ஃபோட்டோ எடுத்திருந்தார்கள்.
விரும்பினால் அதைப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
படத்தை வாங்கினோம்.

பின்னர் பிரிஸ்பேன் ஆற்றின் கரையோரமாக  நடந்தோம்.
ஆற்றின் கரையில் நிழல் தரும்  மரங்களும்,அமர இருக்கைகளும் இருந்தன.மதியம் 12.30 ஆகி விட்டது. தயிர்சாதம், ஊறுகாய் செய்து கொண்டு வந்திருந்தோம்.ஆற அமர  ஆற்றின் அழகையும், அதில் சென்ற 
படகுகளையும் ரசித்துக் கொண்டே உணவைச்  சாப்பிட்டோம்.பிறகு சற்று
தூரம் நடந்து செயற்கைக் கடற்கரைமற்றும்  குளத்தைப் பார்த்தோம்.
 அடுத்து Queensland University of Technology யைப் பார்க்கச் சென்றோம்.பிரிஸ்பேன் ஆற்றில் ஃபெர்ரி எனப்படும் படகில் பயணம் செய்தோம்.அதிலும் பேருந்தில் பயன்
படுத்தும் go card தான் ஸ்கேன் செய்யப் படுகிறது.5 நிமிடத்தில் இறங்க வேண்டிய டெர்மினல் வந்து விட்டது
                          தொடரும்.
                ‌

1 comment: