Wednesday, December 4, 2019

கங்காரு தேசம் 7

MOUNT GRAVATT
இந்த மலையின் பெயர் தான் இந்தப் பகுதியின் பெயராக உள்ளது. 1.5 கி.மீ பயணம் செய்தால் மலை உச்சியை அடைந்து விடலாம்.நான்,என் வாழ்க்கைத் துணைவர், தங்கை, மற்றும் மைத்துனர் காரில் அங்கு
சென்றோம்.அதன் உச்சியில் இருந்து பிரிஸ்பேன் நகரத்தின் அழகைக் 
காணலாம்.கார் நிறுத்தம், சிறுவர்கள் விளையாட சிறு இடம் ஆகியவை
உள்ளன.
நகரை ரசித்துக் கொண்டிருந்த போது ட்ரக்கில் வந்த ஆஸ்திரேலிய மூத்த
குடிமகன் ஒருவர் எங்களை அழைத்தார்.அவரிடம் குட் ஈவினிங் என்றதும் அவர் எங்களிடம் பேசத்தொடங்கினார்.அவர் , ஒரு கோலா
வழி தவறி நகருக்குள் வந்து விட்டது.அதை பத்திரமாக எடுத்து வந்திருக்கிறேன்.இப்போது அதை காட்டிற்குள் விடப் போகிறேன்.
நீங்கள் விரும்பினால் என்னுடன்வரலாம் என்றார்.சந்தோஷமாகப் பின் தொடர்ந்தோம்.
             Animal planet தொலைக்காட்சி நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போல்
இருந்தது.மலைச் சரிவில் சிறிது தூரம் சென்று ஒரு மரத்தின் அடியில் 
நின்றார்.மரத்தின் மேல் ஏறியதும் நம்மைத் திரும்பிப் பார்க்கும் எனக்
கூறினார்.தான் வைத்திருந்த கூடையைத் திறந்தார்.கோலா வெளி  வந்து வேகமாக ஏறியது.பிடிக்க வசதிஇல்லாததால் கீழே விழுந்தது.அதைக்
கையில் பிடித்துக் கொண்டார்.மேலும் சிறிது தூரம் சென்று மரத்தில் விட
மீண்டும் கீழே விழுந்தது.அதைப் பிடிக்கும்போது கையில் கோலாவின்
நகம் பட்டு ரத்தம் வந்து விட்டது.இன்னும் சற்று தூரம் சென்று பெரிய 
மரத்தின் அருகில் வைத்தார்.இந்தமுறை  கோலா மரத்தின் மேல் ஏறி
விட்டது.சிறிது தூரம் ஏறியதும் எங்களைத் திரும்பிப் பார்த்தது.அக்காட்சி தன்னைக் காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி கூறியது போல்
இருந்தது ‌.இப்படி ஒரு நிகழ்வைக் காணச் செய்த இறைவனுக்கு நன்றி
கூறினேன்.இதனை வீடியோவில் படமாக எடுத்தோம்.பெரியவர் அதை
வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.அதை ஏற்றுக் கொண்டோம்.

                மலை மேல் நின்று இயற்கைக் காட்சிகளையும், தொலைவில் வீடுகளும், பெரிய கட்டிடங்களும் பொம்மைகளைப் போல் தெரிவதையும்  கண்டு மகிழ்ந்தோம்.

சிறிது நேரம் இங்கும் அங்கும் உலாவினோம்.காற்று ஜிலுஜிலு என
வீசியது.பின்னர் வீடு திரும்பினோம். Mt.Gravatt பகுதி முழுவதும் மலைப் 
பள்ளத்தாக்காக மேடு பள்ளங்கள் நிறைந்துள்ளது.ஏற்றங்களையும், இறக்கங்களையும் கடந்து வீடு வந்து சேர்ந்தோம்.
                                       தொடரும்.

No comments:

Post a Comment