Monday, December 2, 2019

கங்காரு தேசம் 5

பிரிஸ்பேன்
விமான நிலையத்தில் இருந்து தங்கையின் இல்லம் அமைந்துள்ள
Mt.Gravatt பகுதிக்கு மைத்துனர் காரில் அழைத்துச் சென்றார்.வீட்டில்
அவளும் , மகள் இருவரும் வரவேற்றனர்.சென்னையிலிருக்கும் 
எனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் அலைபேசியில்
பேசினோம்.உணவிற்குப் பின் நல்ல தூக்கம் வந்து விட்டது.காலையில்
கண் விழித்த போது பொழுது விடிந்து விட்டது.நேரத்தைப் பார்த்தால் 5 மணி தான் ஆகி இருந்தது.மைத்துனர் காய்கறி வாங்க சந்தைக்குச் செல்வதாகக்
கூறினார்.எனக்கு ஒரே ஆச்சர்யம்!
கோடை காலத்தில் காலை 5 மணி
முதல் 12 மணி வரை சந்தை .நடைபெறும் என்று கூறினார்
பயணக் களைப்பு நீங்க அன்று 
முழுவதும் ஓய்வு எடுத்தோம்.
                    

WEST FIELDGARDEN CITY.
         West field  என்பது உலகில் பல
இடங்களில் ஷாப்பிங் மால்களை 
அமைத்து நடத்தும் நிறுவனம் ஆகும்.
நாங்கள் பிரிஸ்பேனில்  கார்டன் சிட்டி
என்ற இடத்தில் இருக்கும் ஷாப்பிங் சென்டருக்குச் சென்றோம்.
மைத்துனர் பணிக்குச் சென்று விட்டார்.எனவே நாங்கள்  நகர்ப் பேருந்தில் பயணம் செய்தோம்.
அனைத்து பேருந்துகளிலும் AC வசதி
செய்யப் பட்டுள்ளது.

            பயணத்திற்கான Go  card என்ற கார்டை   இருவருக்கும்  முதல் நாளே
வாங்கித் தந்து விட்டார்கள்.முன் பகுதி வழியாக ஏறி நடுப்பகுதி அல்லது முன் பகுதி வழியாக இறங்க வேண்டும்.இரு முறையும் ஸ்கேனரில் காட்ட வேண்டும்.பேருந்தில் கூட்டமே இல்லை.இறங்கும் இடம் வரும் முன்
இருக்கையின் முன்னுள்ள  சுவிட்ச்சை அழுத்தினால் பேருந்து
நிற்கும்.எல்லோரும் நன்றி கூறிவிட்டு இறங்குகின்றனர்.

                     கார்டன் சிட்டி பஸ் ஸ்டேஷனில் இறங்கி வெஸ்ட் ஃபீல்ட்
ஷாப்பிங் மாலில் நுழைந்தோம்
முதலில் நூலகத்திற்குச் சென்றோம்.ஆங்கிலப் புத்தகங்கள்
அதிகமாக இருந்தாலும் பல மொழிகளிலும்  இருந்தன.தமிழ்ப்
புத்தகங்கள் பல இருந்தன.ஆனந்த
விகடன், கலைமகள் போன்ற 
பத்திரிக்கைகள் இருந்தன.
அவற்றைப் பார்த்ததும் எனக்கு
மகிழ்ச்சியாக இருந்தது.
  ‌.          Coles,Aldi,k mart, Woolworths 
Big w, David Jones,Myre போன்ற பெரிய
கடைகள் இருந்தன.மொத்தம் 470 கடைகள் உள்ளனவாம்.ஒரு பகுதியை மட்டுமே சுற்றிப் பார்த்தோம்.பேரக் குழந்தைகளுக்கு 
புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப்
பொருள்களை வாங்கினோம்.சில
பொம்மைகளை எடுத்து விலைகளை
இந்திய மதிப்பில் கணக்கிட்டால்
தலை சுற்றியது.அப்படியே வைத்து 
விட்டேன்.
       .      கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆங்காங்கே கிறிஸ்துமஸ்
மரங்கள் வைக்கப் பட்டிருந்தன.
கலைடாஸ்கோப் போன்ற வடிவத்தில்
கிறிஸ்துமஸ் கிராக்கர்ஸ் தொங்க
விடப்பட்டிருந்தது.கண்ணைக் கவரும்
வகையில் ஜொலித்துக்கொண்டு இருந்தன.ஷாப்பிங் மாலின் ஒரு பகுதியை மட்டும் பார்த்து விட்டு
மதிய உணவிற்காக வீடு  திரும்பினோம்.இரு தினங்களுக்குப்
பிறகு மீண்டும் காரில் சென்றோம்.
பார்க்காத மற்றோர் பகுதிக்குச் சென்றோம்.ஆடை, அணிகலன்கள்,
அழகு சாதனங்கள், ஃபர்னிச்சர்,
உணவுப் பொருட்கள் எனப் பல பொருள்கள் இங்கு கிடைக்கின்றன.
இந்திய உணவகங்கள்,சீனா, தாய்லாந்து என பல நாட்டு உணவகங்கள் உள்ளன. வீட்டிற்குத் 
தேவையான அனைத்துப்  பொருட்களையும் ஒன்றாக ஒரே 
இடத்தில் வாங்கலாம்.சில விளையாட்டுப் பொருட்கள்  வாங்கினோம்.மூன்று மணி நேரம் 
சுற்றியும் மாலின் முழுப் பகுதியையும் பார்க்க முடியவில்லை.  
இந்தியா திரும்பும் முன்பு சாக்லேட், பிஸ்கட் , பரிசுப்பொருட்கள் வாங்க
இரு மாதங்கள் கழித்து மீண்டும்
வர வேண்டும்.
                                 தொடரும்.



No comments:

Post a Comment