முக்கிய இடங்கள்.
SPARKLAB, SCIENCENTRE.
பிரிஸ்பேன் நகரத்தின் முக்கியமான
பகுதியில் குவீன்ஸ்லாந்து மியூசியம்
உள்ளது.அதன் ஒரு பகுதியே அறிவியல் மையம்.முதலில் ஒரு
உலக உருண்டை தான் கண்ணில்
பட்டது.அதில் பல விவரங்களை அறிய முடிகிறது.இரவு, பகல் மாறுதல், புயல் உருவாதல்,வானில்
விமானங்கள் பயணித்தல் முதலிய
காட்சிகளைக் காண முடிந்தது. அதில் இரவு நேரத்தில்
ஒளி விளக்குகள் ஒளிரும் காட்சியில்
மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கும்
இந்தியா,சீனா போன்ற நாடுகளில்
ஒளி அதிகமாக இருந்தது. ஆப்பிரிக்காவில் நைல் ஆற்றின் கரையில் அதிகமாகவும்,சகாரா பாலைவனத்தின் சோலைகளில்
ஓரிரு இடங்களில் மட்டும் ஒளிர்ந்தது.
மீன் பிடி கப்பல்களின் விளக்குகளின்
ஒளியைக் கடலில் காண முடிந்தது ஒரு பட்டனை அழுத்தினால் அப்பூமி
இரவு,பகல் மாறி மாறி வருவதைக்
காட்ட நம் பள்ளிகளில் செய்வதைப்
போன்ற மாதிரி வடிவமைப்பு பெரியதாக இருந்தது.பூமி 23 டிகிரி
சாய்வான கோணத்தில் அமைக்கப்
பட்டிருந்தது.அடுத்து ஒளியியல் அடிப்படையில் மாதிரிகள் இருந்தன.
பல நிறங்களில் உள்ள பொருட்களை
வைத்து அதில் வேறுவேறு நிற ஒளியைக் காட்டினார்கள்.
உண்மையான நிறம் மாறி பல நிறங்களில் காட்சி அளித்தன.
நம் நிழலை 3 நிறங்களில்
ஒரு திரையில் நாம் ஒட்டிக் கொண்டு
நின்று, பின்னர் எதிராக வந்து பார்த்தால் நிழலைப் போன்ற வடிவம்
தோன்றி மறைந்தது .அங்கு
பணியில்
இருந்த பெண் அதிகாரியிடம் அனுமதி கேட்ட பிறகு தான் செல்
ஃபோனில் படம் எடுத்தேன்.பல படங்கள் எடுக்கத் தயக்கமாக இருந்தது. அடுத்தது ஒலியியல் பிரிவு.நம் காதுகளில் இயர் ஃபோன்
மாட்டிக் கொண்டு கருவியை இயக்கு
வேண்டும். 50 ஹெர்ட்ஸ் முதல் 1000 வரை ஒலி எழுப்பப்பட்டது.ஒவ்வொரு
அளவு ஒலியும் நம் காதில் விழுந்த
உடனே பட்டனை அழுத்த முடிவில் நம் காது கேட்கும் திறன் வயதில்
காட்டப்படுகிறது.
அடுத்த பிரிவில் கலர்கலராக
உட்புறம் A,B,Cஎழுதப்பட்ட குழாய்கள்
வெவ்வேறு உயரத்தில் இருந்தன.ஓசையை எழுப்ப உதவும் கருவிகள் வைக்கப்பட்டு இருந்தது.
அதில் ஓசையை மட்டும் அல்லாமல் இசையையும் உருவாக்க இசைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
காந்தவியல் பிரிவில் வட்ட வடிவ காந்தங்கள் ஒரு குழலில் மாட்டப் பட்டிருந்தன.அதில் ஒரே துருவங்கள் அடுத்தடுத்து வைக்கப்
பட்டதால் ஒட்டாமல் நின்றன.சட்ட காந்தங்களும் அவை ஈர்க்கும் பொருட்களும் இருந்தன.நாம் கையால் அழுத்தினால் காற்று
உருவாகும் விதமாக வட்ட வடிவ அமைப்பு இருந்தது.அதில் காகித ராக்கெட்டுகள் இருந்தன. நாம்அழுத்தினால் காற்று உருவாகி ராக்கெட் பறக்கிறது.
விசையும், அழுத்தமும் செயல்படுவதைக் காட்ட இரு அமைப்புக்கள் இருந்தன.ஒன்றில்
சங்கிலியில் இணைக்கப்பட்ட பந்தை அழுத்திக் கீழே தள்ள எதிர் விசையால் மற்றோர் பந்து உயரே சென்று கீழே இறங்கி வருகிறது.மற்றோர் அமைப்பில்
சிறுவர்கள் , தொங்கும் இருக்கையில்
அமர்ந்து பக்கத்தில் உள்ள உருண்டையை அழுத்தி கீழே தள்ள
இருக்கை மேலே செல்கிறது.
UV rays அறை ஒன்று உள்ளது.
அதில் ஒரு டாலர் நோட்டு சாதாரண ஒளியிலும், மற்ற ஒன்று UV க்கு அடியிலும் வைக்கப் பட்டுள்ளன.UV ல்
உண்மையான நோட்டு எனக்
காட்டும் கோடு தெளிவாகத் தெரிகிறது.கடல் சிப்பி ஒன்றையும்
UV ல் காட்டினார்கள்.
மின்னியல் பிரிவில் சர்க்யூட்
அமைக்கப்பட்டு இணைக்கப்படாமல்
இருந்தது.மாடிப்படியில் உள்ள
விளக்கை ஒளிருமாறு செய்ய ஒரு வடிவம் இருந்தது. திருடர்கள் வந்தால் ஒலிக்கும் மணி ஒன்றும்
இருந்தது.அதைப் பார்வையாளர்கள்
இணைத்து ஒலி எழுப்பும்படி அமைக்க வேண்டும்.
ஊசி போட உதவும் சிரிஞ்சுகள் பயன்படுத்தி நிறைய
கருவிகள் இயங்குமாறு செய்து
வைத்திருந்தனர்.சிரிஞ்சுகளை
அழுத்தி இயக்கங்களைக் காணலாம்.
மைக்ரோஸ்கோப்கள் சிலவும் உள்ளன.அவற்றிலும் சிறு பொருட்களை வைத்துப் பார்க்கலாம்.
ஓரிடத்தில் நம்முடைய பிம்பங்கள் நூற்றுக்கணக்காகத்
தெரியும்படி கண்ணாடிகள் வட்ட
வடிவில் அமைக்கப் பட்டுள்ளது.
ஒரு பெரிய குழியாடி இருந்தது.அதன்
நடுவில் நம் உருவம் பெரியதாக உள்ளது.சற்று நகர்ந்தால் அகலமாக
மாறுகிறது.
Science Bar என்ற பகுதியில் குறிப்பிட்ட நேரங்களில் பல பரிசோதனைகள் செய்து காட்டப்
படுகின்றன.அதை நாங்கள் காண வாய்ப்பு கிடைக்கவில்லை.40 interactive exhibits உள்ளதாகத்
தெரிந்து கொண்டோம்.
இந்த கண்காட்சியில் உள்ள எல்லாப் பொருட்களையும் நாம்
இயக்க முடியும் என்பதே மிகவும் முக்கியமானது. நான் ஆசிரியப் பணியில் இருக்கும் போது
இதைக் காணும் வாய்ப்பு கிடைத்து
இருந்தால் மாணவர்களுக்குப்
பயன்பட்டிருக்கும்.இப்பொழுது
இவற்றை ஆசிரியப் பெருமக்களிடம்
பகிர்ந்து மன நிறைவு பெறுகிறேன்.
No comments:
Post a Comment