Tuesday, December 10, 2019

கங்காரு தேசம் 13

MOUNT  COOT THA
கூத்தா மலை

எனது சிறிய மைத்துனர் திரு.பழனி தன்  இல்லத்திற்கு காரில் அழைத்துச் சென்றார்.அவரது இல்லம் Bridgemandowns  என்ற பகுதியில் உள்ளது . செல்லும் வழியில் கங்காருகள் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட காடு உள்ளது. சாலையின் இருபுறமும் மிக உயரமான தடுப்புச்சுவர் உள்ளது.  ஒரு இடத்தில் மட்டும் கங்காரு கடந்து செல்லுமாம். அந்த இடத்தில் கங்காருவின் படமும், எச்சரிக்கைப் பலகையும் உள்ளது.நாங்கள் சென்ற போது கங்காரு ஏதும் வரவில்லை. அவரது வீட்டில் எனது தங்கையும், அவளது இளைய மகனும் எங்களை வரவேற்றனர்.இரவு  உணவிற்குப் பின்னர் அங்கிருந்து கிளம்பினோம்.திரும்பி வரும் வழியில் மவுண்ட் கூத்தாவிற்குச் சென்றோம்.அது கடல் மட்டத்திலிருந்து 287 மீட்டர் உயரத்தில் உள்ளது.  மலை அடிவாரத்தில் planetarium, botanical garden ஆகியவை உள்ளன.மலைஉச்சியில் ஒரு ரெஸ்டாரன்ட்  உள்ளது.

இரவு 8 மணி ஆகிவிட்டது. அன்று  ஞாயிற்றுக் கிழமை என்பதால்  போக்குவரத்து குறைவாகத்  தான் இருக்கும்.  மலை மீது ஆட்கள் இருப்பார்களா? என நினைத்தேன். ஆனால் நிறைய கார்கள் நிறுத்தப் பட்டிருந்தன. 50க்கும் மேற்பட்ட மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.மலை உச்சியில் இருந்து பிரிஸ்பேனைப் பார்க்க அது ஒளிமயமாகக் காட்சி தந்தது.  கூத்தா மலை நம் ஆனந்தக் கூத்தாடும் சிவபெருமானை நினைவு படுத்தியது. திருவண்ணாமலையில் கீழே நின்று மலை மேலே ஒளிரும்  தீபத்தை  தரிசனம் செய்வோம்.இங்கு மலை உச்சியில் இருந்து கீழே ஒளிரும் விளக்குகளைக் கண்டோம்.     
மலை உச்சியில் வட்ட வடிவில் உயரமான அமைப்பு படிக்கட்டுகளுடன் இருந்தது.அதன்  மேல் நின்று நகரின் இரவு நேரக் காட்சியைக்  கண்டோம்.
Planetarium, Botanical garden ஆகியவைகளைக் காண இன்னோர் நாள் வர வேண்டும். 
                                தொடரும்.

No comments:

Post a Comment