Monday, December 9, 2019

கங்காரு தேசம் 12.


செல்வ விநாயகர் கோவில்

பிரிஸ்பேன் நகரத்தின்  மையப்பகுதியில் இருந்து 40 நிமிடங்கள் காரில் சென்றால் கோவிலை அடையலாம்.  South Maclean பகுதியில் Logan  ஆற்றின்  
கரையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து பிரிஸ்பேன் வாழ் இந்தியர்கள் இதனைக் கட்டியிருக்கிறார்கள்.
வெளியே உள்ள குழாய்களில் கை,கால்களைக் கழுவி விட்டு உள்ளே சென்றோம்.  "மகா கணபதீீீம்"  பாடலின் இசை மட்டும் ஒலித்துக் கொண்டு இருந்தது.
.அதைத்  தொடர்ந்து "குறை ஒன்றும் இல்லை"என்ற பாடலின் பின்னணி இசை  இனிமையாக ஒலித்துக்
கொண்டு இருந்தது.                                  அதைக் கேட்டதும் மனம்
உற்சாகம்  அடைந்தது.
ஆஸ்திரேலியாவில் கால் பதித்து 15 நாட்களுக்குப் பின்னர் இன்று தான் நமது பிள்ளையாரைத் தரிசிக்கிறோம்.அவரை மனதார நினைத்து வணங்கினோம்.அந்தக் கோவிலில்  சிவன்,பார்வதி, சீதேவி, பூதேவி சமேதராக நாராயணன் ஆகியோர் காட்சி அளித்தனர். வள்ளி, தெய்வானையுடன் முருகனும் இருந்தார்.அய்யப்பன் மற்றும் தட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.நவகிரகங்களும் இருந்தன. அனைவரையும் வணங்கி  விட்டு சன்னதியில் சற்று நேரம் அமர்ந்தோம்‌.கோவிலில் கூட்டம் இல்லை.பத்து பேர் இருந்திருப்பார்கள்.சூரிதார் அணிந்த இளம் பெண் புன்னகையுடன் எங்களைக் கடந்து சென்றார்.வெளியே வந்த போது  சர்க்கரைப் பொங்கல் புளியோதரையை பிரசாதமாக அப்பெண்  வழங்கினார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர்கள் குடும்பத்தோடு  வந்திருந்தார்கள்.  அவர்களைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. கோவிலிற்கு வெளியே          வந்தோம்.கார்களை நிறுத்த நிறைய இடம்   உள்ளது.கோசாலையில் பசு ஒன்று உள்ளது.மூன்று, நான்கு  மயில்கள் உலாவிக்  கொண்டு   இருந்தன. ஒரு பகுதியில் சிவலிங்கமும், நந்தியும் வீற்றிருக்கிறார்கள்.


நம் தெய்வங்கள் அனைவரையுமே தரிசித்த நிறைவு கிடைத்தது. மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.
                           தொடரும்‌.‍‌


No comments:

Post a Comment