QUEENSLAND UNIVERSITY OF TECHNOLOGY
பிரிஸ்பேன் ஆற்றின் மறுகரையில் பல்கலைக் கழகம் உள்ளது. Economics, Engineering, Business management என division ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. CUBE என்ற ஒரு பிரிவுக்கு தங்கை மகள் அழைத்துச் சென்றாள்.அங்கு பெரிய திரைகளில் குவீன்ஸ்லாந்து மாநில இயற்கைக் காட்சிகள் ஒளிர்ந்தன. உண்மையான டயனோசர் நடந்து செல்வது போன்ற காட்சி இருந்தது.
மூன்றாவது தளத்தில் நடந்து சென்றபோது தரைத் தளத்தில் இருப்பது போல தோன்றியது.அவ்வளவு அருமையாக மரங்கள், செடிகள் வளர்க்கப் பட்டிருந்தன.
அடுத்து பல்கலைக்கழகத்தை ஒட்டி அமைந்த Botanical gardenக்குச் சென்று ஒரு
பகுதியைப் பார்த்தோம்.வெயில் அன்று அதிகமாக இருந்தது.36 டிகிரி வெப்பநிலை என்றாலும் தாங்க முடியவில்லை. மைத்துனர் பணியை
முடித்து விட்டு எங்களை அழைத்துச் செல்ல தனது காரில் வந்து விட்டார்.
சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தோம்.
தொடரும்.

No comments:
Post a Comment