Tuesday, December 10, 2019

கங்காரு தேசம் 14

SUNDAY MARKET
ஞாயிறு சந்தை
கோடை காலத்தில் பிரிஸ்பேனில் காலை 4.30 மணிக்கு பொழுது விடிந்து விடுகிறது. 6 மணிக்கு வெயில் அடிக்கத் தொடங்கி விடும். அதிகாலையிலேயே வியாபாரமும் தொடங்கி விடும்.300க்கும் மேற்பட்ட
கார்களை நிறுத்தும் அளவிற்கு காலி இடம் உள்ளது.வியாபாரிகள் அனைவரும் காரிலும், சரக்கு வாகனங்களிலும் வருகிறார்கள்.  
ஆங்காங்கே தற்காலிக கூரைகளின் கீழே கடைகள் அமைக்கிறார்கள். வாங்கச் செல்பவர்களுக்கு ஒரு நபருக்கு 2 டாலர் கட்டணம் விதிக்கப்படும். காரை நிறுத்தக் கட்டணம் கிடையாது.
                
சந்தையில் காய்கறிகள், பழங்கள், இறைச்சி வகைகள், உணவுப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும்.
கத்திரிக்காய், வெண்டைக்காய், சௌசௌ, பாகற்காய்,கேரட்,பீட்ரூட், தக்காளி, வெங்காயம் என எல்லாம் கிடைக்கின்றது. விலையை ரூபாயில்
கணக்கிட்டால்  எதையும் வாங்க  முடியாது. எனவே  அச்சிந்தனையே வரக் கூடாது என மைத்துனர் அறிவுரை  கூறி இருந்தார்.  Asparagus, celery, kale, broccoli போன்றவை இருந்தன.வெவ்வேறு நிற குடைமிளகாய்கள், வெவ்வேறு நிற  உருளைக் கிழங்குகள் ,வாழைக்காய், மஞ்சள் பூசணி ஆகிய அனைத்தும் இருந்தன.
             கோடை காலம் என்பதால் மாம்பழங்கள் நிறைய  இருந்தன.ஆப்பிள், ஆரஞ்சு,மாதுளை, திராட்சை  என எல்லாம் இருந்தன. அவகோடா,ப்ளூபெர்ரி வாங்கினேன்.அவைகளை நம் நாட்டில் சாப்பிட்டதாக நினைவு இல்லை.Globalisation காரணமாக எல்லாம் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.
அசைவ உணவுப் பிரியர்கள் இங்கு பல வகையான அசைவ உணவுகளை
உண்ணலாம்.நம் நாட்டில் உள்ளது போல் தோல் உரித்து தொங்க      விடப்பட்ட    ஆடுகளை     இங்கு காண முடியாது.சீனர்கள் அதிக அளவில்       வசிக்கும் பகுதியில் மட்டுமே  அதைக் காணலாம்.   மீன் வகைகள், இறைச்சி அனைத்தும் நறுக்கப் பட்டு  பாக்கெட்டில்   வைக்கப் பட்டுள்ளன.      Ham  எனப்படும் பன்றி   இறைச்சியை பெரிய பாக்கெட்டில் பார்க்க முடிந்தது.
              இவற்றைத் தவிர பயன் படுத்தப்பட்ட பழைய  பொருட்களையும்  இங்கு     விற்பனை செய்கின்றனர். சில உணவகங்கள் உள்ளன.உட்கார்ந்து  சாப்பிட நாற்காலிகள்,மேசைகள் நடுவில் போடப்பட்டு உள்ளது. Dosa hut என்ற ஒரு   தோசைக் கடை இருந்தது.அதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையைச் சேர்ந்த, பிரிஸ்பேன் நகரத்தில் வசிக்கும் ஒரு மாமியாரும்,
மருமகளும்  எங்களைப் பார்த்த உடனே  நின்று  பேசிவிட்டுச்  சென்றனர்.           
                   தொடரும். 


                                    

No comments:

Post a Comment