கண்டேன் கங்காருவை
இந்த நிகழ்ச்சியைக் காண ஒரு அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அமர்வதற்கு இருக்கைகள் உள்ளன.காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.ஒரு பெண்மணி மரக்கிளையைத் தன் விரலால் தட்டினார்.ஆந்தை பறந்து வந்து கையில் வந்து உட்கார்ந்தது. பார்வையாளர்களின் தலைக்கு மேல் அங்கும் இங்கும் பறந்தது.தரப்பட்ட இரையை உண்டது.தன் முட்டைக்கண்களால் பார்த்து விட்டுச் சென்றது.மற்றோர் பெண்மணி பெரிய கழுகை செய்கையால் அழைக்க அது கையில் வந்து உட்கார்ந்தது.பார்வையாளர்கள் நன்கு பார்க்குமாறு சுற்றி வந்தார்.பின் இறக்கைகளைை விரித்துப் பறந்தது. LORIKEET FEEDING
அதன் உணவுத் தட்டை நாம் கையால் உயர்த்திப் பிடிக்க வந்து அமர்ந்து உண்கிறது.முதலில் 30க்கும் அதிகமானோர் நின்று கொண்டு இருந்தார்கள்.பறவைகள் கீழே வரவில்லை. அரைமணி நேரம் கழித்து மீண்டும் வந்தோம்.கூட்டம் குறைந்து ஓரிருவர் நின்றுகொண்டு இருந்தனர்.பஞ்சவர்ணக் கிளிகள் வந்து நாங்கள் வைத்திருந்த ,அங்கு தயாரிக்கப்பட்ட உணவை அருமையாக உண்டன.மகிழ்ச்சி அடைந்தோம்.
கோலா
Cockatoo என்ற பறவையின் அலகு கிளியைப் போல உள்ளது.ஹலோ என்றதும் பதில் குரல் எழுப்புகிறது. சிவப்பு நிற இறக்கையைக் கொண்ட காக்கட்டூ ஒன்றையும் பார்த்தோம்.
கழுத்தில் நீலநிறம் உடைய ஒரு காஸவரியைப் பார்த்தோம். உலகில் அருகி வரும் உயிரினங்களில் இதுவும் ஒன்று.
LONEPINE KOALA SANCTUARY
இந்த சரணாலயம் Fig tree pocket என்ற பகுதியில் உள்ளது.1927ஆம்
கோலாக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு
கங்காருகளுக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.ஓம்பாட் (wombat), ஈமு,
காஸவரி,டாஸ்மேனியன் டெவில்,டிங்கோ, ஊர்வன, பறப்பன போன்ற அனைத்தும் இடம் பெற்றன.
ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு மாதம் ஆன பின்னரே கங்காருவைக்
காண வாய்ப்புக் கிடைத்தது. இயற்கையான சூழலில் பெரிய மைதானத்தில் அவைகளைக் கண்டோம்.
Raptor show
பஞ்சவர்ணக் கிளிகள் பலவற்றை ஒரே இடத்தில் காண வாய்ப்புக் கிடைத்தது.
நூற்றுக்கணக்கான கோலாக்களை இங்கு காணலாம்.
கங்காருவைப் போல கோலாவிற்கும் குட்டியைப் பாதுகாக்க வயிற்றுப் பகுதியில் பை உள்ளது.ஒரு நாளில் 20 மணி நேரம் தூங்குமாம். இவை யூகலிப்டஸ் இலைகளை உண்கின்றன. பார்வையாளர்கள் கோலாவைத் தொட்டுப் பார்க்கலாம். அதற்கு நீண்ட வரிசை இருந்தது. கோலாவை கையில் வைத்ததுக் கொண்டு ஃபோட்டோ எடுக்க தனியாகக் கட்டணம் கட்ட வேண்டும்.
SHEEP DOG SHOW
நம் நாட்டில் துள்ளிக் குதித்தோடும் ஆடுகள் இந்த சரணாலயத்தில் ஒரு பகுதியில் மட்டுமே சுற்றிக் கொண்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் ஆடுகள் வளர்க்கப் படுகின்றன. அவற்றைக் கண்காணிக்க நாய்கள் பணியில் உள்ளன.இந்த ஷோவில் நாய் ஒன்று ஆடுகளை வழி நடத்திச் சென்றது. ஒரு சுற்றை முடித்துக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.பணியை முடித்த சந்தோஷத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த நீரில் மூழ்கிக் குளித்து விளையாடியது.
பல வகையான பாம்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.ஓரிடத்தில் நீளமான பாம்பு ஒன்றை மாலை போல கழுத்தில் மாட்டி ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள். கட்டணம் கட்டி வரிசையில் நின்று படம் எடுத்துக் கொள்ளலாம்.
பறவைகளில் குக்குபெராவைக் கண்டோம்."kookaburra sits on old gum tree" என்ற நர்சரி பாடல் நினைவுக்கு வந்தது.அதன் குரல் சிரிப்பதைப் போல இருந்தது.laugh kookaburra laughஎன்பதன் பொருள் இப்போதுதான் புரிந்தது.
ஈமு என்ற பறவையைப் பார்த்தோம்.
பிளாடிபஸ்
நன்னீரில் வசிக்கும் இவை மின் அதிர்வை ஏற்படுத்தி இரை இருக்கும் இடத்தை அறிகின்றன. ஆண் பிளாடிபஸின் குதிகால் போன்ற பாதத்தில் நச்சுச் சுரப்பிகள் உள்ளன.
நன்னீர் ஆமை,முதலை ,டிங்கோ என்னும் நாய் ஆகியவையும் இருந்தன.அடுத்து டாஸ்மேனியன் டெவில் என்ற விலங்கைப் பார்த்தோம்.அது நம் ஊர்ப் பெருச்சாளியின் பெரிய அண்ணன் போல இருந்தது.
இது சிறுவிலங்குகளை உண்ணக் கூடியது.டாஸ்மேனியாவில் மட்டுமே
வசிக்கிறது.பெயரில் டெவில் இருந்தாலும் உண்மையில் அமைதியான விலங்கு.
காலை 9.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சுற்றிப் பார்த்தோம்.உணவு உண்ண பெரிய இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவு, அங்கு வாங்கிய உணவு என எதுவாக இருந்தாலும் அங்கு உட்கார்ந்து உணவு அருந்தலாம். சரணாலயத்தின் உள்ளே Wifi வசதி செய்யப் பட்டுள்ளது.Bloggers lounge என ஆங்காங்கே இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.அங்கு அமர்ந்து blog எழுதி வெளியிடலாம்.பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோலா சரணாலயம், உலகத்தில் கோலாக்களுக்கான முதலாவது மற்றும் பெரிய சரணாலயம் என்னும் பெருமை பெற்றுள்ளது.
தொடரும்.
No comments:
Post a Comment