கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
6.30க்கு கிறிஸ்துமஸ் ஊர்வலம் வரும் சாலையில் ஒரு இடத்தில் நின்று கொண்டோம்.சரியாக 7 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது.
ஒரு வண்டியில் மேரிமாதா, யோசேப் போல வேடமணிந்த இருவர் குழந்தையுடன் வந்தனர்.குழந்தை இயேசுவைப் பார்க்க Melchior, Caspar,
ஒரு ஷோ பதினைந்து நிமிடங்கள் நடக்கிறது.பின்பு மீண்டும் மீண்டும்
கிறிஸ்துமஸ் டிசம்பர் 25அன்று தான் கொண்டாடப்படுகிறது. என்றாலும் இப்போதே விழா களை கட்டி விட்டது. பிரிஸ்பேன் நகர நிர்வாகம் ஒரு போட்டியை நடத்துகிறது.சிறப்பான முறையில் நிறைய விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்ட வீடுகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் இன்டர்நெட்டில் தங்களது முகவரியைத் தெரிவிக்கிறார்கள். எங்களது பகுதியில் உள்ள இரு முகவரிகளை தெரிந்து கொண்டு அங்கு சென்றோம்.அவர்களின் அனுமதியைப் பெற்று படங்கள் எடுத்தோம்.
பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. ஷாப்பிங் சென்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.கார்களை நிறுத்த இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.எனவே இனிமேல் கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பின்னரே ஷாப்பிங் செல்ல வேண்டும்.
பிரிஸ்பேன் நகரத்தின் மையப்பகுதியில் Queen Street mall உள்ளது.அங்கு Christmas parade இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கி விட்டது.அதைப் பார்க்க முடிவு செய்தோம். City council எனப்படும் மாநகராட்சி அலுவலகம் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மாலை 7.30க்கு அக்காட்சியைக் காணலாம். மாலை 5 மணிக்கே நாங்கள் இருவர், தங்கை, மைத்துனர் மற்றும் மகள்கள் இருவர் என அனைவரும் கிளம்பினோம். ஒரே
பேருந்தில் செல்லலாம். நாங்கள் இன்னும் மின்சார ரயிலில் பயணம் செல்லவில்லை.எனவே பாதி தூரம் பேருந்திலும்,பாதி தூரம் ரயிலிலும்
பயணம் செய்தோம்.எதில் பயணம் செய்தாலும் go card தான் பயன்படுகிறது.ரயில்வே நிலையத்திற்குள் செல்லும் போதே அதை ஸ்கேனரில் காட்ட வேண்டும். இறங்கி வெளியே வரும்போதும் அதைக் காட்டினால் தான் ரயில் நிலையத்தின் வெளியே வர கதவு திறக்கும். இன்னும் எவ்வளவு டாலர் மீதம் உள்ளது என்பதையும் ஸ்கேனரில் அறிந்து கொள்ளலாம்.
ஆறு மணிக்கு சிட்டி கவுன்சில் பகுதிக்கு வந்து விட்டோம்.மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றும்,அமர்ந்து கொண்டும் இருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், ஆடல்,பாடலுடன் உலா வந்தன.
ஒரு வண்டியில் மேரிமாதா, யோசேப் போல வேடமணிந்த இருவர் குழந்தையுடன் வந்தனர்.குழந்தை இயேசுவைப் பார்க்க Melchior, Caspar,
Balthazar என்ற மூன்று அரசர்கள் ஒட்டகங்களில் பயணித்து வந்தனராம்.அதை நினைவுறுத்த மூன்று ஒட்டக பொம்மைகளை அலங்கரித்து சுமந்து வந்தனர்.கிறிஸ்மஸ் தாத்தா ஒரு வண்டியில் வந்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் பதினைந்து நிமிடங்கள் ஊர்வலம் நடந்தது. கூட்டம் சிறிது குறைந்ததும் சிட்டி கவுன்சிலை நோக்கி நடந்தோம்.
ஒளிவிளக்குகளால் அழகுபடுத்தி இருப்பார்கள் என நினைத்தேன்.ஆனால் அங்கு ஒரு கார்ட்டூன் ஷோவே நடந்து கொண்டிருந்தது.
ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சற்றுநேரம் நின்று ரசித்து விட்டு கிளம்பினோம்.அடிலெய்டு வீதியில் Ginger Garlic Indian Cuisine என்ற உணவகம் உள்ளது.அங்கு சென்று சாதம்,நாண்,குருமா ஆகியவற்றை வயிறார உண்டோம்.நன்றி கூறிவிட்டு வெளியே வந்தோம். பெயர்ப்பலகையில் 10 மணிக்கு மேல் ஏழைகளுக்கு உணவு இலவசம் என்று எழுதப்பட்டு இருந்தது.உணவக உரிமையாளருக்கு மனதார நன்றி கூறினோம்.
தொடரும்.


No comments:
Post a Comment