Friday, December 6, 2019

கங்காரு தேசம் 9

குவீன்ஸ்லாந்து மியூசியம்

ANZAC LEGACY GALLERY

முதல் உலகப் போரின் போது குவீன்ஸ்லாந்திலும் போர் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வீரர்கள் அதில் போரிட்டு தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.அவர்களுடைய நிழற்படங்கள், பயன்படுத்திய பொருட்கள், அணிந்த பேட்ஜ்கள்  போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.ஒரு படைவீரர் போரில் குண்டடி பட்டிருக்கிறார். அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த சிகரெட் கேஸ் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. பின் 82 வயது வரை வாழ்ந்து  உள்ளார்.அவர்  படத்தின் முன் சிதைந்த  சிகரெட் கேஸ் வைக்கப் பட்டுள்ளது.
   
        Mephisto என்ற பெரிய ராணுவ   டாங்கர் வாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அது ஃபிரான்ஸ் நாட்டில் போரில் ஈடுபட்ட போது
மண்ணில் சிக்கிக் கொண்டது. எனவே  கைவிடப் பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு கப்பல் மூலம் இங்கு
வந்து சேர்ந்திருக்கிறது. பீரங்கிக் குழாய்கள், குண்டுகள் ஆகியவற்றைப் பார்த்தோம். இன்னும் ஓர் உலகப்போர் வந்து விடக்கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே வெளியே வந்தோம்.

     LOST CREATURES 
குவீன்ஸ்லாந்தில் முற்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் எலும்புக்கூடுகள் வைக்கப் பட்டுள்ளன. டயனோசர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தன

Fossil எனப்படும் படிமங்களைப் பற்றி
நாம் அறிவோம்.அதை முதலில் இங்குதான் கண்டேன்.

பதப்படுத்தப்பட்ட உயிரினங்களைப்‌ பார்த்தோம்.சிறிய வண்டுகள்,பட்டுப்பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என பல உயிரினங்களைக் காணமுடிந்தது. கடல்வாழ் உயிரினங்களும் பதப்படுத்தப்பட்டு இருந்தது.

                    YIDAKI என்ற இசையை உருவாக்கும் Didjeridu என்ற இசைக் கருவியைப் பார்த்தோம்.
   நம் புல்லாங்குழல் போன்று மூங்கிலால் செய்யப் பட்டிருந்தது. ஆனால் பக்கவாட்டில் துளைகள் இல்லை.மூன்று மணி நேரமாகச் சுற்றினாலும் முழுமையாகப் பார்க்க   முடியவில்லை. Dinosaur garden,Jurassic joe,Spiders exhibition ஆகியவற்றைப் பார்க்க முடியவில்லை. Wheel of Brisbaneல் ஏறும் ஆசையில் வெளியே வந்தோம். முன் தினமே டிக்கெட் வாங்கி விட்டோம்.பிரிஸ்பேன் நதிக்கரையில் நடக்க ஆரம்பித்தோம்.
                   தொடரும்.



,



No comments:

Post a Comment