Wednesday, December 4, 2019

கங்காரு தேசம் 6

இந்தியன் ஸ்டோர்ஸ் (சாமி ஸ்டோர்ஸ்)
Image result for samy's imports and exports



                        வீட்டில் சமைக்கத் தேவையான அரிசி, பருப்பு முதலான
அனைத்தையும் வாங்க மைத்துனர் திரு.வேல் முருகன் தன் காரில் கிளம்பினார். அவருடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.சாமி ஸ்டோர்
என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டு இருந்தது.அதில் கீழே  இந்தியன், 
மலேசியன், ஸ்ரீலங்கன் என எழுதப் பட்டிருந்தது.தமிழர் ஒருவர் தான் அதன் பொறுப்பாளர்.எங்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் பேசினார்.
                அதில் உள்ள பொருட்களை அறிய விரும்பினேன்.ஒவ்வொரு பிரிவிலும்  நின்று கவனித்தேன். நம் ஊரில் கிடைக்கும் அத்தனையும் இருந்தன. பூஜை சாமான்கள், விதம்விதமான அரிசிகள், பருப்புகள், பலசரக்குகள், காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள், ரெடிமிக்ஸ்கள், நவ தானியங்கள், எண்ணெய்கள், இஞ்சி மிட்டாய், ஓமத்தண்ணீர் என எல்லாம்
இருந்தன.



                நம் நாட்டில் மட்டும் கிடைக்கக் கூடிய காய்கறிகள் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தன. முருங்கைக் காய், புடலங்காய்,  தண்டுக்கீரை ஆகியவைகளைப் பார்த்தேன். கடையின் ஒரு பகுதியில் Frozen என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு பிரிவு இருந்தது.உள்ளே காய்கறிகள்.இறைச்சி, சப்பாத்தி, பூரி, சமோசா, பரோட்டா ஆகியவை இருந்தன. சிறிய வெங்காயம் அந்தப்
பிரிவில் மட்டுமேஇருந்தது.  

      ‌‌‌          மிக்ஸர், முறுக்கு, தட்டை, கோவில்பட்டி கடலை மிட்டாய், இருட்டுக்கடை அல்வா , மைசூர் பாகு என அனைத்தும் இருந்தன.அன்று சமைக்கப் பட்ட வெண்பொங்கல், உளுந்து வடை,காரவடை, இட்லி, மினி இட்லி, சுண்டல்,சட்னி, சாம்பார் ஆகியவை வெளியே தெரியும்படி சில அழகான டப்பாக்களில் வைக்கப் பட்டிருந்தன.இவை இன்றே விற்பனையாகி விடுமா? என்று கேட்க கடைக்காரர் இன்னும் சற்று  நேரத்தில் காலி ஆகிவிடும் என்றார். தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.ஒரு ஆங்கிலேய இளம் பெண் உள்ளே வந்தாள். என்ன வாங்கப்  போகிறாள்? எதுவாக இருந்தாலும் நம் உணவுப் பொருட்களை வாங்குகிறாள்என மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியன் ஸ்டோர் என்று பேச்சு வழக்கில் கூறுகிறார்கள்.இதை தமிழன் ஸ்டோர் என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.கனத்த  பைகளுடன் மகிழ்ச்சியாக வீடு வந்து சேர்ந்தோம்.

1 comment:

  1. எனது கருத்தை எடுத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி, மச்சினி

    ReplyDelete